பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
Published on

பெரியகுளம்:

பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜோதிமுருகன், ஒன்றிய செயலாளர் ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில், எண்டப்புளி கிராமத்தில் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த முருகன் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், பெரியகுளம் நகராட்சி 27, 28, 29, 30 ஆகிய வார்டு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான வராகநதி கரையோரம் தடுப்புச்சுவர் அமைத்து தரக்கோரியும், வடகரை காயிதே மில்லத் நகரில் நடைபாதைகளை சீரமைக்க கோரியும் கோஷமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபீக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com