ஊரப்பாக்கத்தில் கார் மோதி மூதாட்டி பலி

ஊரப்பாக்கத்தில் கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 70). இவர் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் காந்தம்மாள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட காந்தம்மாள் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com