உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மாணவன் பலி

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி 5 ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் மதன் பாபு(வயது 11). இவன் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். மதன் பாபு நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் அருகேயுள்ள ஏரிக்கு இயற்கை உபாதை கழிக்க செல்வதாக அவனது பெற்றோரிடம் கூறி சென்றான். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவன் திரும்பி வராததால் அச்சமடைந்த அவனது பெற்றோர் ஏரிக்குச் சென்று மகனை தேடினர். அப்போது மதன்பாபு பிணமாக மிதந்ததை பார்த்து கதறி அழுதனர். 

இயற்கை உபாதை கழிக்க சென்ற அவன் தவறி ஏரிக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாணவன் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதன்பாபுவின் உடலை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இதுபற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மாணவன் வீட்டுக்கு சென்று அவனது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com