மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்... மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்

மதிய நிலவரப்படி, பாஜக 88 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 202 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்
Published on

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகம், கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுடன் இணைந்து இந்த தேர்தல் நடத்தப்பட்டாலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, இடதுசாரி-காங்கிரஸ் போன்ற கட்சிகளின் விடாப்பிடியான போட்டியால் மேற்கு வங்காள தேர்தல் மட்டும் நாடு முழுவதும் தனிக்கவனத்தை ஈர்த்திருந்தது.

அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com