பெருமாநல்லூரில் டாஸ்மாக் பார் ஊழியர்களை கத்தியால் குத்திய வழக்கில் 3 பேர் கைது

பெருமாநல்லூரில் டாஸ்மாக் பார் ஊழியர்களை கத்தியால் குத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பெருமாநல்லூர்:

பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் பார் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் கண்ணப்பன் . இவரிடம் கடந்த நவம்பர் மாதம் பாண்டியன்நகரை சேர்ந்த பாபுராஜ் (வயது 35) என்பவர் பணம் கேட்டுள்ளார். ஆனால் கண்ணப்பன் பணம் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாபுராஜ், நண்பர்களுடன் டாஸ்மாக் பாருக்கு வந்து அங்கு படுத்திருந்த செந்தில் (19), உதய் சந்திரன் (18) ஆகியோரை கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து பாபுராஜ் மற்றும் அவருடைய நண்பர்களை தேடி வந்தனர். தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாபுராஜ் (35), இவருடைய நண்பர்கள் பிரசன்னா (25), சமத்துவபுரத்தை சேர்ந்த சக்திவேல் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com