தூத்துக்குடியில் மது விற்ற 16 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து 141 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கயத்தாறு பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த ஒருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com