தோகைமலை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பலி

தோகைமலை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

தோகைமலை:

தோகைமலை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 30). ஆட்டோ டிரைவரான, இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் தோகைமலை வந்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணம்பட்டி அருகில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செந்தில் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை செந்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com