சுரண்டை அருகே காரில் கடத்தி சென்ற ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது

சுரண்டை அருகே காரில் கடத்தி சென்ற ரூ.1½ லட்சம் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சுரண்டை மெயின் பஜாரில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள டிராவல்ஸ் அருகே ஒரு காரில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து காரை சோதனை செய்த போது அதில் குட்கா மூட்டைகள் இருந்தது. உடனே 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் செங்கோட்டை யை சேர்ந்த மணிகண்டன் (வயது37), இசக்கிராஜ் (28) என்பது தெரியவந்தது.அவர்கள் 2 பேரும் வெளியூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து கடைகளுக்கு சப்ளை செய்ய முயன்றது தெரியவந்தது.

2 பேரையும் கைது செய்த போலீசார், குட்காவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com