சுதாகரன் விடுதலையாக 7 மாதங்கள் ஆகும்- சசிகலாவை சந்தித்த பின் நடிகர் பிரபு தகவல்

சுதாகரனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியவில்லை, அவர் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார் என்று நடிகர் பிரபு கூறினார்.
நடிகர் பிரபு
நடிகர் பிரபு
Published on

சென்னை:

சென்னை தியாகராய நகர் இல்லத்தில் வசித்துவரும் சசிகலாவை தற்போது அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் சந்தித்து வருகின்றனர். நேற்று முன் தினம் ச.ம.க. தலைவர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்தனர். இதையடுத்து நேற்று நடிகர் பிரபுவும் சசிகலாவை சந்தித்தார்.

பின்னர் அவரிடம் சுதாகரன் அபராத தொகை செலுத்தாதது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சுதாகரனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியவில்லை, அவர் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார்” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரபு, “குடும்ப உறுப்பினர் என்ற முறையில் சசிகலாவை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். அவர் நலமுடன் இருக்கிறார்’. என்றார்.

பிரபுவின் அண்ணனும் சிவாஜி கணேசனின் மூத்த மகனுமான ராம்குமார் பா.ஜனதாவில் இணைந்தது பற்றிய கேள்விக்கு “அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், நான் அரசியலில் இல்லை” என்று பதில் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com