எலி மருந்து தின்று மாணவர் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் எலி மருந்து தின்று மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகர் முத்துபிள்ளை தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், டீக்கடையில் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் ஜனார்த்தனன். இவர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று ஜனார்த்தனன் வீட்டில் தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவர் வாந்தி எடுத்தார். 

இதற்கிடையில் கடையில் இருந்து வந்த முத்துகிருஷ்ணன் மகன் வாந்தி எடுப்பதை பார்த்து, வீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்து ஊசிபோட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் வாந்தி எடுத்து கொண்டிருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஜனார்த்தனனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் எலி மருந்து சாப்பிட்டுள்ளார் என கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். 

இந்த நிலையில் ஜனார்த்தனன் பெற்றோர் திட்டியதால் இறந்ததாக முதலில் தவறான தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ஜனார்த்தனன் இறப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com