முதுகுளத்தூரில் மாநில கபடி போட்டி: தஞ்சை மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு - 250 பேர் பங்கேற்பு

முதுகுளத்தூரில் நடக்கும் மாநில கபடி போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வில் 250 பேர் பங்கேற்றனர்.
சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில கபடி போட்டிக்கான மாவட்ட அணி வீராங்கனைகள் தேர்வு நடந்தபோது எடுத்தபடம்.
சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில கபடி போட்டிக்கான மாவட்ட அணி வீராங்கனைகள் தேர்வு நடந்தபோது எடுத்தபடம்.
Published on

தஞ்சாவூர்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வருகிற 19-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் மாநில அளவில் 20 வயதிற்குட்பட்டவருக்கான கபடி போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.

வீரர்கள் தேர்வை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் கிரு‌‌ஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்தார். செயலாளரும், இந்திய கபடி அணி முன்னாள் வீரருமான பாஸ்கரன், அமைப்பு செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் தனசேகரன், துணைத் தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் வீரர்கள் தேர்வு நடந்தது.

20 வயதிற்குட்பட்டவர் தான் என்பதற்கான வயது சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் 250 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து மாவட்ட கபடி அணிக்கு 12 வீரர்களும், மாற்று வீரர்களாக 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல் மாநிலஅளவிலான மகளிர் கபடி போட்டியும் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தஞ்சை மாவட்ட கபடி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 60 வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் திறமையான 12 வீராங்கனைகளும், மாற்று வீராங்கனைகளாக 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com