தென்மேற்கு பருவமழை தீவிரம் -வெள்ளக்காடான மும்பை சாலைகள்

மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக சான்டா குரூஸ் பகுதியில் 107.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சாலையில் தேங்கிய மழைநீர்
சாலையில் தேங்கிய மழைநீர்
Published on

மும்பை:

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை, தானே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மும்பை கொலபாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23.4 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சான்டா குரூஸ் பகுதியில் 107.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், வடக்கு அரபிக்கடல், தெற்கு குஜராத், தெற்கு மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் வடக்கு வங்கக்கடல், மேற்கு வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com