மேகாலயாவில் 6 சுரங்க தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர்

அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 சுரங்க தொழிலாளர்கள், மேகாலயாவில், கிழக்கு ஜெயின்சியா மலை பகுதியில் அரசு அனுமதியின்றி தோண்டப்பட்ட அகலம் குறுகிய எலிவளை சுரங்கத்தில் பணியாற்றினர்.
சுரங்க தொழிலாளர்கள்
சுரங்க தொழிலாளர்கள்
Published on

சில்லாங்:

அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 சுரங்க தொழிலாளர்கள், மேகாலயாவில், கிழக்கு ஜெயின்சியா மலை பகுதியில் அரசு அனுமதியின்றி தோண்டப்பட்ட அகலம் குறுகிய எலிவளை சுரங்கத்தில் பணியாற்றினர். ஞாயிற்றுக்கிழமை இரவில் பணி செய்தபோது, சுரங்கம் இடிந்து விழுந்து மூடிக்கொண்டது.

இதுபற்றிய தகவல் போலீசாருக்கு தெரியவந்ததும், சுரங்கம் இருந்த இடம் தேடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரங்கத்தை தோண்டி புதையுண்டவர்களை மீட்கும்பணி தொடங்கியது.

“சுரங்கம் தோண்டுவதற்காக வெடிமருந்தை பற்ற வைத்தபோது, மண் சரிந்து தண்ணீர் உள்ளே புகுந்ததால் சுரங்கம் இடிந்து விழுந்து மூடிக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. உயிரோடு மண்ணில் புதைந்த சுரங்கத் தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com