சிறுகனூர் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலி

சிறுகனூர் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

சமயபுரம்:

சிறுகனூர்அருகே உள்ள குமுலூர்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 30). கூலித் தொழிலாளியான இவருக்கு மனோ என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று தச்சங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து வந்தபோது அந்த வழியாக சென்ற ஏதோ வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதனை ஓட்டியவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com