தஞ்சை அருகே தனியார் நிறுவன காவலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

தஞ்சை அருகே தனியார் நிறுவன காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 74). இவர் தஞ்சை அருகே உள்ள தளவாய்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று மர்மநபர்களால் ஜெயபால் கொலை செய்யப்பட்டு கம்பெனி வாசலில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக வாளமார்கோட்டை கோவில் தெருவை சேர்ந்த செந்தில் (37), தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த குமார் (51) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கம்பெனி முன்பு நின்று செந்தில், குமார் உள்ளிட்ட சிலர் மது அருந்தியதாகவும், அதனை தட்டி கேட்ட ஜெயபாலை அவர்கள் கொலை செய்து இருசக்கரவாகனம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com