

பட்டிவீரன்பட்டி:
பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 45). இவர் செம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் பழைய வத்தலக்குண்டுவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் சுந்தரராஜபுரம் பிரிவில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (25) மற்றும் அவரது மனைவி சினேகா வந்த (21) ஸ்கூட்டர், பழனிக்குமாரின் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோபிநாத், அவருடைய மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.