கனமழை எதிரொலி - சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எதிரொலியால் தமிழகத்தில் உள்ள 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம்
மழை வெள்ளம்
Published on

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ  வேகத்தில் வீசியது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுவை இழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு தொடர் மழை காரணமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இதேபோல், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com