நாட்டறம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்திய ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்- டிரைவர் கைது

நாட்டறம்பள்ளி அருகே தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் கடத்தி வந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாட்டறம்பள்ளி:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியைநிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் மினி லாரியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பறக்கும்படையினர் சோதனை செய்தபோது லாரியில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அதை தொடர்ந்து டிரைவர் நெமிலி ரெடிவலம் அண்ணாநகரை சேர்ந்த தர்மா (வயது 21) என்பவரை பிடித்து பறக்கும் படையினர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்தது. மேலும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இது தொடர்பாக நாட்டறம்பள்ளிபோலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com