ரத்தினகிரி அருகே சென்ட்ரிங் தகர சீட்டுகள் திருட்டு

ரத்தினகிரி அருகே சென்ட்ரிங் தகர சீட்டுகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் சியாம் (வயது 28). இவர், சென்ட்ரிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள புதிய மனைப்பிரிவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்ட்ரிங் வேலை செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, சென்ட்ரிங் அடிக்கப்பட்டு இருந்த தகர சீட்டுகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சியாம் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதில் பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 2 பேர் சென்ட்ரிங் தகர சீட்டுகளை திருடிச்சென்று விட்டதாக, தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com