77வது பிறந்த நாள்- ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் தலைவர்கள் பலரும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை
Published on

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாள் விழாவை இன்று நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாடினார்கள். இதையொட்டி அவரது சிலை மற்றும் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

டெல்லி வீர்பூமியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது மகனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்...ரெயிலில் பயணம் செய்து சக பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த மத்திய ரெயில்வே மந்திரி

X

Maalai Malar
www.maalaimalar.com