புதுச்சத்திரம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு விவசாயி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு விவசாயி உயிரிழந்தார்.
கருப்பு பூஞ்சை
கருப்பு பூஞ்சை
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏ.கே.சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 60). விவசாயி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இந்தநிலையில் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டது. இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி விவசாயி வெங்கடாசலம் உயிரிழந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com