சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை- அமைச்சர் தகவல்

சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
Published on

மதுரை:

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கும் முன்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடை பெற்று வருகிறது. மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது குறித்து ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வரவில்லை. அரசியலை முன்னுறுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்துள்ளனர். அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர் வருகிற 30-ந் தேதி திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கட்டியுள்ள அம்மா கோவிலை திறந்து வைக்கவும் நேரில் வருகிறார். என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com