ஓசிக்கு மது தர மறுத்தவரை தாக்கிய சாமியார் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மது தர மறுத்தவரை பிளேடால் தாக்கிய சாமியரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சந்தனசுந்தரராஜ் (வயது 52). அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினார். அப்போது காவி உடை அணிந்து சாமியார்போல் வந்த ஒருவர் தனக்கும் மது தருமாறு கேட்டார். ஆனால் சந்தனசுந்தரராஜ் கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாமியார் கையில் வைத்திருந்த பிளேடால் தாக்கியதில் சந்தனசுந்தர ராஜூக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியாரை கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் கணேசன் (45) என்பதும், கரூரைச் சேர்ந்த இவர் சாமியார் உடையில் ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருவதும் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com