

புதுடெல்லி:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.