போடியில் வளைகாப்பு முடிந்த உடன் பலியான கர்ப்பிணி பெண்

போடியில் வளைகாப்பு முடிந்தவுடன் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மரணம்
மரணம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் தியானேஸ்வரன் (வயது 22). தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரும் குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவுசல்யா (22) என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது கவுசல்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரி வந்தது. இந்நிலையில் கவுசல்யா வீட்டில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்ததும் கவுசல்யாவை அவரது பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கவுசல்யா உயிரிழந்தார். இது குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் உத்தமபாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com