

தேனி:
தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் பிளாவடியான் (வயது 53). போடி அணைக்கரைப்பட்டியில் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் பணிச்சுமை இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். மேலும் மன அழுத்தம் காரணமாக அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. இதற்காக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது கயிறு அறுந்து அவர் கீழே விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.