சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மரணம் அடைந்தார்.
செல்வராஜ்
செல்வராஜ்
Published on

வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). இவர், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் சுயநினைவை இழந்து, கோமா நிலைக்கு சென்றதாக தெரிகிறது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருக்கு கோமதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்‌. கோமதி வேலூர் காவல் பயிற்சி மையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com