குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா மீது புகார்

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா மீது பா.ம.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் நடிகர் சூர்யா மீது புகார் அளிக்க வந்த பா.ம.க.வினர்.
குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் நடிகர் சூர்யா மீது புகார் அளிக்க வந்த பா.ம.க.வினர்.
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி மாநில இளைஞரணி துணை செயலாளர் என்.குமார், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் புகார் மனு கொடுத்தனர்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் தமிழகத்தின் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com