கும்பமேளா பெயரளவுக்கு நடத்துவதே சரி: பிரதமர் மோடி

கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் இந்த விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

உத்தரகாண்டின் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகிறது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம், சமூக இடைவெளி, முககவசம் போன்ற விதிமுறைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் இந்த விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இதனை அடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை கும்பமேளா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும், சாதுகளுக்கும் கொரோனா பரவி வருவதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சுவாமி அவ்தேஷானந்த் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசுகையில்,

'கும்பமேளா இப்போது கொரோனாவுக்கு எதிரான போரில் வழிப்படுத்தும் குறியீடாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பக்தர்களுக்கும், சாதுக்களுக்கு தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சுவாமி அவ்தேஷானந்த், 'பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிரை காப்பாற்றுவது புனிதமானது நெறிமுறைகளை பின்பற்றி பெருமளவில் புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.' என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com