விவசாயிகள் நிதிஉதவி திட்டம் - 8வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டப்படி, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். 9 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தப்படும்.

காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சில பயனாளிகளுடன் பிரதமர் உரையாடுகிறார். மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமரும் கலந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com