பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அரியபாக்கம் காலனியை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசி என்ற சசிகலா (வயது 45). இவர் பெரியபாளையம் பகுதியில் பக்தர்களுக்கான வேப்பஞ்சேலை கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பெரியபாளையத்தில் இருந்து அரியபாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கிழே விழுந்த சசிகலா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மகன் கண் எதிரே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். சசிகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com