பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கொலை

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே எண்டபுளியை சேர்ந்தவர் முருகன் (வயது48). தீபாவளியையொட்டி அப்பகுதியில் பட்டாசு வெடித்தார். பெட்டிக்கடை வைத்துள்ள அக்கம்மாள் என்பவர் அங்கு பட்டாசு வெடிக்க கூடாது என கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்மாளுக்கு ஆதரவாக ராஜா மற்றும் அவரது நண்பர்கள் முருகனுடன் மோதலில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜா, முருகனை தள்ளி விட்டார். இதில் காயம் அடைந்த அவர் இறந்து விட்டார். சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய கோரி முருகனின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பெரியகுளம்- திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

மேலும் வடகரை இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவாரர்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com