ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

நாகர்கோவில்:

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ஈத்தாமொழி அருகே வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் அமரேசன்(வயது 53), தொழிலாளி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வார்டில் இருந்து அமரேசன் கழிவறைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுபற்றி ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து கழிவறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு அமரேசன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அமரேசன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை. அதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com