பரமத்திவேலூர் அருகே ராஜாவாய்க்காலில் மூழ்கி பெயிண்டர் பலி

பரமத்திவேலூர் அருகே ராஜாவாய்க்காலில் மூழ்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர் பலி
பெயிண்டர் பலி
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலுக்கு சென்று கரையில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்த அவர் மேலே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சண்முகவேலின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com