பரமக்குடி அருகே ஆடுகள் திருடிய வழக்கில் மேலும் 3 பேர் கைது

பரமக்குடி அருகே ஆடுகள் திருடிய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பரமக்குடி:

பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது ஆட்டு மந்தையில் இருந்து 5 ஆடுகளை திருடிச்சென்று வீரசோழன் சந்தைக்கு விற்பதற்காக ஒரு கும்பல் சென்றுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த குமார் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வீரசோழன் சந்தைக்குச் சென்று நோட்டமிட்டனர். அப்போது அங்கு திருடிய ஆடுகளை விற்பனை செய்வதற்காக இருந்த பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த விஜய கனி, மேலச்சத்திரம் பகுதியை சேர்ந்த அருண் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் போலீசார் நடத்திய விசாரணையில் பரமக்குடி அருகே உள்ள வெங்காளூர் கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரவீன்குமார், ராமர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஆடு திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com