பந்தநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

பந்தநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

திருப்பனந்தாள்:

பந்தநல்லூர் அருகே உள்ள பாலூர் குடியான தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன். விவசாயி. இவருடைய மனைவி சிவசெல்வி (வயது32). இவர் நேற்று வீட்டிற்கு குடிதண்ணீர் எடுப்பதற்காக மின்மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com