பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

அலங்காநல்லூர்:

பாலமேடு அருகே பொம்மியநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம். இவரது மகன் திரவியம்(வயது 24). கூலி தொழிலாளி. இவர் பாலமேடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கீழே விழுந்ததில் திரவியம் தலையில் பலத்த அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திரவியம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com