5வது வெற்றி - ஸ்காட்லாந்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்

டி20 உலக கோப்பையில், தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி
Published on

சார்ஜா:

டி20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 54 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், ஸ்காட்லாந்து 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com