ஒரத்தநாட்டில் மேற்கூரை இடிந்து சேதமான பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

உடனடியாக ஒரத்தநாடு பேரூராட்சி நிர்வாகம் இடிந்து சேதமான பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
பேருந்து நிலையம் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
பேருந்து நிலையம் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
Published on

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டில் பஸ் நிலையம் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்த நிலையில் தகவலறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின்படி தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகீன் அபுபக்கர் மற்றும் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் பஸ் நிலையத்தை பார்வையிட்டனர்.

உடனடியாக ஒரத்தநாடு பேரூராட்சி நிர்வாகம் இடிந்து சேதமான பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த ஆய்வில் ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர், பேரூராட்சி நிலைய பொறியாளர் சிங்கராயர் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மிக விரைவில் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com