சாதாரண மூக்கு கண்ணாடியை ரூ.1 லட்சத்துக்கு விற்று மோசடி- ஒருவர் கைது

சாதாரண மூக்கு கண்ணாடியை ரூ.1 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
அரசமுத்து
அரசமுத்து
Published on

தேனி:

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அரசமுத்து (வயது 39). இவரது நண்பர் திவாகர் (26). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மதன் (42) என்பவரிடம் தங்களிடம் மேஜிக் மூக்கு கண்ணாடி இருப்பதாகவும், இந்த கண்ணாடியை அணிந்தால் எதிரே உள்ள நபர் ஆடை அணிந்திருந்தாலும், ஆடையின்றி உடல் மட்டும் தெரியும் என்று கூறி ரூ.1 லட்சத்துக்கு ஒரு சாதாரண கண்ணாடியை கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசமுத்துவை கைது செய்தனர். தப்பியோடிய திவாகரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com