திருச்சி அருகே சரக்கு ரெயில் மோதி முதியவர் பலி

திருச்சி அருகே சரக்கு ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்சி:

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே காவிரி ரெயில்வே பாலத்தில் நேற்று மாலை சுமார் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சரக்கு ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். 

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com