நெல்லை அருகே பஸ் மோதி மூதாட்டி பலி

நெல்லை அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகே உள்ள கீழபூவாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி பாலம்மாள் (வயது 64). இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் புறநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com