ஓச்சேரி அருகே மது விற்றவர் கைது

ஓச்சேரி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காவேரிப்பாக்கம்:

ஓச்சேரி அருகே களத்தூர் காலனியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 38). இவர் வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாக அவளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் மதுபானம் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து வேலாயுதத்தை போலீசார் கைது செய்து, 5 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com