ஒச்சேரி அருகே கார் மோதி முதியவர் பலி

ஒச்சேரி அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

காவேரிப்பாக்கம்:

ஒச்சேரியை அடுத்த சித்தஞ்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). இவர், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் திடீரென அவர் மீது மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com