தலைமுடி சாப்பிட்ட மாணவி- விழுப்புரம் கலெக்டருக்கு ஆணையம் நோட்டீஸ்

ஆன்லைன் வகுப்பில் ஏற்பட்ட மன உளைச்சலால் தலைமுடியை சாப்பிட்ட மாணவியின் வயிற்றில் உருவான கட்டியை டாக்டர்கள் அகற்றினர்.
மாணவியின் வயிற்றில் தலை முடியால் உருவான கட்டி
மாணவியின் வயிற்றில் தலை முடியால் உருவான கட்டி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் நகரை சேர்ந்த, 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இந்த மாணவி மொபைல் போன் வாயிலாக ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துள்ளார்.

அந்த மாணவிக்கு 15 நாட்களுக்கு முன் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. மாணவியை தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். பரிசோதனையில் மாணவியின் வயிற்றில் தலை முடியால் உருவான கட்டி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாணவியிடம் கேட்டபோது, ஆன்லைன் வகுப்பில் ஏற்பட்ட மன உளைச்சலால் தன் தலைமுடியை பிய்த்து சாப்பிட்டதாக கூறினார். டாக்டர்கள் அக்கட்டியை அகற்றினர். மனநல டாக்டர் வாயிலாக மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் மாணவிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களில் அறிக்கை அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com