நாமகிரிப்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி

நாமகிரிப்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் மகன் விஜயகுமார் (வயது 20). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் தற்போது கட்டிட தொழிலாளி வேலைக்கு சென்று வந்தார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மொபட்டில் வீடு திரும்பினார். குப்பகொட்டாய் பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரியும், இவரது மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com