சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதல்: விவசாயி பலி

சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சிறுபாக்கம்:

சிறுபாக்கம் அருகே உள்ள விநாயகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகன் வேல்முருகன்(11), அக்காள் மகன் சுதாகர்(18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். மங்களூர் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனமும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. 

இதில் பலத்த காயமடைந்த சங்கர் உள்பட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்த புகாரின்பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com