சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்- கல்லூரி மாணவர் பலி

சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சின்னசேலம்:

சின்னசேலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 23). இவர் சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த வடசென்னிமலை அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற தமிழ்செல்வன் மாலையில் வகுப்பு முடிந்ததும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவனூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் தாய் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com