லாலாபேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

லாலாபேட்டை அருகே குடும்ப தகராறால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

லாலாபேட்டை:

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி குணசுந்தரி (வயது 27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரவீந்திரன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட குணசுந்தரி வீட்டில் பின்புறம் சென்று யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் மாலை தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் உடல் முழுவதும் தீபரவியதால் குணசுந்தரி அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் தீக்காயம் அடைந்த குணசுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குணசுந்தரி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com