சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து- மேலும் ஒரு பெண் பலி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது.
மரணம்
மரணம்
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 26 பேர் இறந்தனர். மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சாத்தூர் படந்தாள் பகுதியைச் சேர்ந்த வீரலட்சுமி (வயது 40) என்ற பெண் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com